30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

தலை மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
Published on

கோவை

கோவை சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் திரு.வி.க நகரை சேர்ந்தவர் ஜான் சேவியர் (வயது 37). கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் நாகமாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேற்கூரை அமைக்கும் வேலைக்கு சென்றார். அங்கு 30 அடி உயரத்தில் நின்று வேலை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது மேற்கூரையில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் திடீரென சரிந்தது. இதில் ஜான் சேவியர் தடுமாறி 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவருக்கு தலை மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com