சுரண்டை அருகே சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை

பசுபதி ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.நேற்று காலை பசுபதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
சுரண்டை அருகே சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை
Published on

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் பசுபதி. (வயது 55). இவர் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பசுபதி தற்போது குடும்பத்துடன் கீழ சுரண்டை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் பசுபதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com