தென்காசியில் 21-ந்தேதி முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களைச் சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டரால் முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்.வருகிற 21-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தென்காசியில்   21-ந்தேதி முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களைச் சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டரால் முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் கூட்டத்தில் தெரிவிக்கலாம். சிறப்பு முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டை பிரதியில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயனடையுமாறு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com