பனைமரம் முறிந்து விழுந்து ராணுவவீரர் படுகாயம்

இவர் களப்பால் கிராமத்தில் உள்ள ஓ.என்.சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பின்னர் வெங்கடாசலம் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வெங்கடாசலம்.
வெங்கடாசலம்.
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெங்கடாசலம்.இவர் களப்பால் கிராமத்தில் உள்ள ஓ.என்.சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.அவர் தனது வீட்டிலிருந்து திருமக்கோட்டை சாலை வழியாக இன்று களப்பால் நோக்கி சென்றபோது மறவக்காடு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் இருந்த பனைமரம் ஒன்று திடீரென முறிந்து வெங்கடாசலம் மீது விழுந்தது.இதில் காயமடைந்த வெங்கடாஜலத்தை பொதுமக்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வெங்கடாசலம் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பனைமரம் விழுந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com