வானூர் அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி காவலாளி பலி

வானூர் அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி காவலாளி பலியானார்.
வானூர் அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி காவலாளி  பலி
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் சமரசம் பகுதியை சேர்ந்தவர் முகமது சுலைமான் (வயது 44) இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 28ஆம் தேதி வழக்கம்போல் பணி முடித்துவிட்டு சுலைமான் தனது மோட்டார் சைக்கிளில் கோட்டகுப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது சின்ன கோட்டகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் வந்த போது சாலையின் குறுக்கே மாடு ஒன்று சென்றது. எதிர்பாராத விதமாக சுலைமான் மோட்டார் சைக்கிளை மாடு மீது மோதி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு புதுவை அரச ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுலைமான் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com