ஆம்னி பஸ் நிலையத்தில் அலுவலகத்திற்கு அறை ஒதுக்க வேண்டும்

தற்போது அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
ஆம்னி பஸ் நிலையத்தில் அலுவலகத்திற்கு அறை ஒதுக்க வேண்டும்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையம் நேற்று முன்தினம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆம்னி பஸ் நிலையத்தில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கூறும்போது :-

ஆம்னி பஸ் நிலையத்தில் அலுவலகம் அமைக்க வேண்டும். பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். கூடுதலாக மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com