சின்னசேலம் அருகே கூரை வீடு தீப்பிடித்து ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

முருகன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்னதாகவே வீடு முழுவதும் எரிந்து நாசமாயின.
தீ விபத்தில் எரிந்து நாசமான வீடு மற்றும் பீரோவினை படத்தில் காணலாம்.
தீ விபத்தில் எரிந்து நாசமான வீடு மற்றும் பீரோவினை படத்தில் காணலாம்.
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள அக்கறைபாளையம் காந்தி நகரை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன் (வயது 40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சின்னசாமி படுத்து உறங்கினார். நள்ளிரவு நேரத்தில் சின்னசாமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்கம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதனைப் பார்த்து கூச்சலிட்டு வீட்டில் இருந்த அனைவரையும் சின்னமணி வெளியேற்றினார். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்னதாகவே வீடு முழுவதும் எரிந்து நாசமாயின. இதில் வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 22 ஆயிரம், 25 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன், பீரோ, கட்டில், டிவி உள்பட அனைத்து பொருள்களும் எரிந்து நாசமாயின. சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் எரிந்து போன வீட்டை பார்வையிட்டார். தீவிபத்து குறித்து கச்சராயபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com