கோவையில் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி

நஸ்ரின் பாத்திமா கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி பொள்ளாச்சிக்கு வந்தார். போலீசார், இருதரப்பு பெற்றோரிடமும் கலந்து பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
கோவையில் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
Published on

கோவை,

தென்காசி அருகே உள்ள வி.கே.புதூரை சேர்ந்தவர் நஸ்ரின் பாத்திமா (வயது 19). இவர் பொள்ளாச்சி கஞ்சம்பட்டியைச் சேர்ந்த பெயிண்டர் கருப்பசாமி (21) என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு வலுத்தது.எனவே நஸ்ரின் பாத்திமா கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி பொள்ளாச்சிக்கு வந்தார். அங்கு அவருக்கு காதலர் கருப்பசாமி உடன் 26-ந்தேதி திருமணம் நடந்தது.இதனை தொடர்ந்து காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இருதரப்பு பெற்றோரிடமும் கலந்து பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பது என்று முடிவு செய்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com