அதிராம்பட்டினத்தில், ரோலர் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி

அதிராம்பட்டினத்தில் இருந்து 15 கி.மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.சேதுரோடு சாலை வழியாக மல்லிப்பட்டினத்தை சென்றடைந்தது.
ரோலர் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரோலர் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

அதிராம்பட்டினம்:

கடல்பசு தினத்தை முன்னிட்டு பான் செக்கர்ஸ் பப்ளிக் மற்றும் ஓம்கார் பவுண்டேசன் மற்றும் கிங்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்த ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்வை பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான் தொடக்கி வைத்தார்.அதிராம்பட்டினத்தில் இருந்து தொடர்ந்து 15 கிலோமீட்டர் மேலாக நடைபெற்ற இந்த உலக சாதனை ரோலர் ஸ்கேட்டிங் நிகழ்வில் 7 மாணவர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர் .இந்த ஸ்கேட்டிங் அதிராம்பட்டினம் சேதுரோடு சாலை வழியாக மல்லிப்பட்டினத்தை சென்றடைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com