குன்னூர் அருகே சாலையில் சென்ற கார் மீது பாறை உருண்டு விழுந்தது

தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் சிக்கியவரை மீட்டனர். ஜெயச்சந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி விட்டார்.
குன்னூர் அருகே சாலையில் சென்ற கார் மீது பாறை உருண்டு விழுந்தது
Published on

அருவங்காடு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது64). இவர் நேற்றிரவு ஊட்டியில் இருந்து கோவைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயம் மழை பெய்து கொண்டிருந்தது. இவரது கார் குன்னூர் அருகே உள்ள மரப்பாலம் பகுதியில் வந்த போது, மலையில் இருந்து திடீரென பாறை ஒன்று உருண்டு வந்து, காரின் முன் பகுதி மீது விழுந்தது.

இதில் கார் இடிபாடுகளில் சிக்கி கொண்டது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் சிக்கியவரை மீட்டனர். அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி விட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com