அடையாறு ஆற்றில் குதித்து தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை

அடையாறு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனர்.ராமச்சந்திரன் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.
அடையாறு ஆற்றில் குதித்து தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை
Published on

சென்னை:

அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் மீது இன்று காலை சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அடையாறு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் மந்தைவெளியை சேர்ந்த ராமச்சந்திரன். வயது 36 என்பது தெரியவந்தது. இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

இதுகுறித்து ராமச்சந்திரனின் தந்தை லோகநாதன் போலீசாரிடம் கூறுகையில், 'எனது மகன் நேற்று காலை பணிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று விசாரிக்க செல்லும்போது திரு.வி.க. பாலத்தில் எனது மகனின் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

வாகனத்தின் மீது செல்போன் மற்றும் ஆவணங்கள் வைக்கப் பட்டிருந்தது. நெடுநேரமாகியும் வராததால் போலீசில் தகவல் கூறினேன்.

இந்நிலையில் எனது மகன் உடல் ஆற்றில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. ராமச்சந்திரன் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவரது மொபைல் எண்ணில் கால் ஹிஸ்டரி டெலிட் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்கொலைக்கான காரணங்கள் என்ன? கால் ஹிஸ்டரி மற்றும் மெசேஜ்கள் எதற்காக அழிக்கப்பட்டுள்ளன என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com