கோவையில் வாலிபரை திருமணம் ெசய்த பிளஸ்-2 மாணவி

மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவானந்தா காலனியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
கோவையில் வாலிபரை திருமணம் ெசய்த பிளஸ்-2 மாணவி
Published on

கோவை,

கோவை துடியலூர் அருகே உள்ள சாமிசெட்டி ப்பாளையத்தை சேர்ந்த 19 வயது மாணவி.

இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவானந்தா காலனியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாக பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சம்பவத்தன்று மாணவியின் தந்தை அவரை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று விட்டார். மாலையில் சென்று பார்த்த போது மாணவி மாயமாகி இருந்தார். அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. கடந்த 19-ந் தேதி தனது தந்தையை தொடர்பு கொண்ட மாணவி தான் ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் என கூறினார். பின்னர் செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டார்.

இது குறித்து மாணவியின் தந்தை மாயமான தனது மகளை கண்டு பிடித்து தரும்படி பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com