தனியார் நிறுவனத்தில் காப்பர் வயர் திருடியவர் கைது

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே தெற்கு சிலுக்கன்பட்டி பகுதி தனியார் நிறுவனத்தில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து காப்பர் வயரை 3 பேர் திருடி சென்றுள்ளனர்.இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளரான மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ஆத்தி முத்துவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தனியார் நிறுவனத்தில் காப்பர் வயர் திருடியவர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே தெற்கு சிலுக்கன்பட்டி பகுதி தனியார் நிறுவனத்தில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து காப்பர் வயரை 3 பேர் திருடி சென்றுள்ளனர். இதனை அங்கு வேலை செய்யும் இரவு காவலாளிகள் அரிபுத்திரன், சூசைமரியான் ஆகியோர் கண்டு அவர்களை துரத்தி பிடிக்க முயன்றனர். இதில் இதில் கீழத்தட்ட பாறை தெற்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது 30) என்பவர் பிடிபட்டார். அவரது கூட்டாளிகள் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாள ரான மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ஆத்தி முத்துவுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர் புது க்கோட்டை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெ க்டர் ஞானராஜ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தார். தொடர்ந்து அவரி டம் இருந்த காப்பர் வயரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com