சங்கரன்கோவிலில் செல்போன் கடையில் போன் திருடியவர் கைது

அஜித்குமார் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகின்றார். மர்ம நபர் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள போனை திருடி சென்றது தெரியவந்தது.
சங்கரன்கோவிலில்  செல்போன் கடையில் போன் திருடியவர் கைது
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 28). இவர் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று கடைக்கு செல்போன் வாங்க ஒருவர் வந்துள்ளார். பழைய செல்போன் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அவரது தந்தை செல்லத்துரை கடையில் இருந்துள்ளார்.

அவர் செல்போன் வாங்க வந்தவரிடம் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை காண்பித்துள்ளார். அதற்குள் இன்னொரு வாடிக்கையாளர் வரவே அவரிடம் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள போனை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து திருவேங்கடம் என்.ஜி.ஓ. காலனி என்ஜிஓ காலனியை சேர்ந்த முருகன் மகன் அருண்பாண்டியன் (19) என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com