

தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பேகாரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பொன்மாது. கூலித்தொழிலாளி.
இவர் அஞ்செட்டி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குந்துகோட்டை கணவாய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இவரை மீட்டு தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பொன்மாது உயிரிழந்தார்.
இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.