பெரியநாயக்கன்பாளையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த பெயிண்டர்

மாரித்துரை, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கொலையா? என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த பெயிண்டர்
Published on

கவுண்டம்பாளையம்,

தென்காசி மாவட்டம் சிவராமபேட்டை கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரித்துரை(வயது50).

இவர் கோவை வந்து, பெரியநாயக்கன் பாளையம் வீரபாண்டி பிரிவு பகுதியில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார்.

இவர் தினமும் வேலை முடிந்ததும் குடித்து விட்டு வந்து, அந்த பகுதிகளில் தகராறில் ஈடுபடுவதும், பின்னர் அங்குள்ள கடைகள் முன்பு தூங்குவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இன்று காலை மாரித்துரை, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது மாரித்துரையின் முக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. மேலும் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தது.

இதையடுத்து போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மாரித்துரை எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரிக்கின்றனர். அவர் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com