மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து சாவு

வெண்ணந்தூர் சாலையில் உள்ள சேகோ பேக்டரி பகுதியில் இரவு 8 மணியளவில மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து சாவு
Published on

நாமக்கல்:

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவர் கடந்த 26-ந் தேதி மல்லூரில் இருந்து வெண்ணந்தூர் சாலையில் உள்ள சேகோ பேக்டரி பகுதியில் இரவு 8 மணியளவில மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறிய அவர் சாலையோரம் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு உறவினர்கள் ஆஸபத்திரிரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கந்தசாமி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com