மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த கூட்டம்

வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது.அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த கூட்டம்
Published on

திருத்துறைப்பூண்டி:

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மூலம் செயல்படும் ஹெல்த் அசெம்ப்ளி திட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும். இதற்கு தொண்டு நிறுவனங்கள் உதவிட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கண்ணகி, வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர், பாரத மாதா நிறுவனர் மணிமாறன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com