வளசரவாக்கத்தில் வீட்டு முன்பு நிறுத்திய காருக்குள் ஆண் சடலம்

பின் இருக்கையில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.காரில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வளசரவாக்கத்தில் வீட்டு முன்பு நிறுத்திய காருக்குள் ஆண் சடலம்
Published on

போரூர்:

வளசரவாக்கம் கனகதாரா நகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த். பங்குச்சந்தை வர்த்தகம் தொழில் செய்து வருகிறார்.

இவர் தனது காரை வீட்டு முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று மாலை தியேட்டரில் சினிமா படம் பார்ப்பதற்காக அரவிந்த் தனது மனைவியுடன் காரில் ஏறி புறப்பட தயாரானார். அப்போது காரின் கதவை திறந்தபோது பின் இருக்கையில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரில் இறந்து கிடந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் காருக்குள் எப்படி வந்தார்.

இறந்தது எப்படி என்பது மர்மமாக உள்ளது. அரவிந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரை அங்கு நிறுத்தி உள்ளார். அப்போது அவர் காரின் கதவை லாக் செய்ய வில்லை என்று தெரிகிறது. எனவே காருக்குள் பிணமாக கிடந்தவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பே இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com