ஏர்வாடி அருகே கார் திருட்டு வழக்கில் ஒருவர் சிக்கினார்

ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி, ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). தற்போது இவர் தனது அண்ணனுக்கு சொந்தமான காரை ஓட்டி வருகிறார்.
ஏர்வாடி அருகே கார் திருட்டு வழக்கில் ஒருவர் சிக்கினார்
Published on

களக்காடு:

ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி, ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் சந்தனராஜ் மகன் அருண்குமார் (வயது 24). இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு கன்னியாகுமரியில் குட்கா வியாபாரி ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கன்னியாகுமரி போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

கார் திருட்டு

தற்போது இவர் தனது அண்ணனுக்கு சொந்தமான காரை ஓட்டி வருகிறார். நேற்று மாலை 3 மணிக்கு அருண்குமார் காரை தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். அப்போது ஒரு காரில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள் காரை திருடி சென்று விட்டனர். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே இன்று அதிகாலை கார் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஜெயக்குமார் என்பவர் திசையன்விளை தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக ஏர்வாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏர்வாடி போலீசார் திசையன்விளைக்கு சென்று ஜெயக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் திசையன்விளை மற்றும் ஏர்வாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com