நாமகிரிப்பேட்டை அருகே பாலத்தில் இருந்து 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவர் சாவு

நாரைக்கிணறு பிரிவு ரோட்டில் உள்ள சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்தார்.
வரதராஜன் பிணமாக கிடைக்கும் காட்சி
வரதராஜன் பிணமாக கிடைக்கும் காட்சி
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள புதுச்சத்திரம் ஒன்றியம் ராஜா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 70). கூலித் தொழிலாளி.

இவர் தற்போது நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காமராஜ் நகர் நாரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்த அவரது தம்பி முருகேசன் (60) என்பவரது வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக தங்கி இருந்து வந்துள்ளார்.

இவர் நேற்று மாலையில் நாரைக்கிணறு பிரிவு ரோட்டில் உள்ள சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அவர் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வரதராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த வரதராஜனுக்கு சின்னப்பாப்பு என்ற மனைவியும், மணிகண்டன் மற்றும் சங்கர் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி–ரிக்கு அனுப்பி வைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com