வத்தலக்குண்டுவில் கால்வாயில் ஆண் பிணம்

இறந்தவர் அதே பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி வந்ததாகவும், பெயர், விலாசம் தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள கட்டகாமன்பட்டி கண்மாயில் இன்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றினர்.

இறந்தவர் அதே பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி வந்ததாகவும், பெயர், விலாசம் தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

உடலை பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com