பாவூா்சத்திரம் அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி

ஆணைமுத்து நேற்று இரவு நெல்லையில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி வந்தாா்.பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் விலக்கு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள உணவகத்துக்கு சாப்பிட சாலையை கடந்துள்ளாா்.
பாவூா்சத்திரம் அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி
Published on

தென்காசி:

சங்கரன்கோவில் அருகே உள்ள அழகுநாச்சியாா்புரம் அவனிகோந்தல் பகுதியை சோ்ந்த சுப்பையா மகன் ஆணைமுத்து (வயது57). சமையல் எரிவாயு லாரி டிரைவர். இவா் நேற்று இரவு நெல்லையில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி வந்தாா்.

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் விலக்கு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள உணவகத்துக்கு சாப்பிட சாலையை கடந்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக நெல்லையில் இருந்து தென்காசிக்கு சென்ற அரசு பஸ் அவா் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ஆணைமுத்து உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரை வரான சிங்கிலிப்பட்டியை சோ்ந்த செந்தில்குமாா் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com