ஊட்டியில் குடியிருப்புக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை

சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டியில் குடியிருப்புக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் குடியிருப்பு உள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சிறுத்தை காட்டில் இருந்து வெளியேறி, புதன்கிழமை அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

அப்போது நாய்கள் குரைத்தன. சிறுத்தை ஒரு நாயை வேட்டையாடி கொன்று தூக்கி சென்றது. இது அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதிகளில் சிறுத்தை நுழைந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com