துடியலூர் அருகே குடிபோதையில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
துடியலூர் அருகே குடிபோதையில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
Published on

கோவை 

கோவை துடியலூரை அடுத்த நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் ஜகுகாரியா (வயது 42).

இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஜகுகாரியா அளவுக்க அதிகமாக மதுகுடித்ததாக தெரிகிறது. பின்ர் அவர் கைகளை கழுவுவதற்காக அருகில் உள்ள வரண்ட கிணறு அருகே சென்றார்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அவர் தவறி அந்த கினற்றில் விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com