தக்கலை போலீஸ் நிலையம் அருகில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்

இரவு நேரத்தில் ரோட்டில் நடுவில் அமைக்கபட்டுள்ள பேரி கார்டு வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியவில்லைரவு நேரத்தில் மிக வெளிச்சம் தரக்கூடிய உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தக்கலை போலீஸ் நிலையம் அருகில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்
Published on

கன்னியாகுமரி :

தக்கலை பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையொட்டி தக்கலை டி.எஸ்.பி. கணேசன் மற்றும் தக்கலை போக்குவரத்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து மாற்றி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்து கடந்த ஒரு வாரத்தின் முன்பு பஸ் நிறுத்தம் ஆரம்பிக்கபட்டது.

இந்நிலையில் இரவு நேரத்தில் ரோட்டில் நடுவில் அமைக்கபட்டுள்ள பேரி கார்டு வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியவில்லை. இதனால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் உடனடியாக உயர் கோபுர மின் விளக்கு அமைத்தால் மட்டுமே இந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க முடியும்.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் இரவு நேரத்தில் மிக வெளிச்சம் தரக்கூடிய உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com