உயர் அழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு- தீப்பொறி பறந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

மின்கம்பி அறுந்து விழுந்த போது அவ்வழியே பொதுமக்கள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
உயர் அழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு- தீப்பொறி பறந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர், மார்க்கெட் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை, பூ கடைகள் உள்ளன. இந்த பஜார் பகுதிக்கு திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். மேலும் பஜார் பகுதியை சுற்றி அரசு பள்ளி, தனியார் பள்ளி, திருமண மண்டபங்கள், கோவில்கள் உள்ளன.

இதனால் இந்த சாலையில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இருக்கும். இந்நிலையில் இன்று காலை ஆஞ்சநேயர் கோவில் அருகே மார்க்கெட் கூட்டுச்சாலையில் திடீரென உயர் மின் அழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது.

மேலும் மின்கம்பிகள் உரசி தீப்பொறிகள் பறந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மின்கம்பி அறுந்து விழுந்த போது அவ்வழியே பொதுமக்கள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

இதுபற்றி உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com