கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுமி மாயம்

கோவில் திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சிறுமி வீட்டைவிட்டு சென்றார்.நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை.
கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுமி மாயம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி குட்டப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. குட்டப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி கோவில் திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சிறுமி வீட்டைவிட்டு சென்றார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாயார் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகமணி வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com