காரைக்காலில் வாங்கிய துணிகளுக்கு பணம் கொடுக்காமல் ஊழியர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட்டம் 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பியுள்ளனர்.
காரைக்காலில்  வாங்கிய துணிகளுக்கு பணம் கொடுக்காமல்  ஊழியர்களை தாக்கிவிட்டு  தப்பி ஓட்டம் 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
Published on

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்டத் தில் பிரதான சாலையான பாரதியார் வீதியில் அன்சாரி என்பவர் துணிக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று இரவு காரில் வந்த 5 பேர், அந்த கடையில் விலை உயர்ந்த துணிகள் எடுத்த னர். தொடர்ந்து மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி விட்டு துணிகளை எடுத்துக்கொண்டு காரில் தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து கடை ஊழி யர்கள் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீஸ் சூப்பிரண்ட் சுப்ரமணியம் தலைமையிலான போலீசார் அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் கடை யில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து 5 மர்ம நபர்களை தேடி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com