கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.திருப்பாலைவனத்தில் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Published on

பொன்னேரி:-

முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பாலைவனத்தில் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஈ.ஏ.பி. சிவாஜி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பொன்னேரி எம் எல் ஏ துரை சந்திரசேகர் , ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில், சேர்மன் ரவி, நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், நகர செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஏ.கே. சம்பத்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தேசராணி தேசப்பன், இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்பரசன், முன்னாள் நகர இளைஞர் அணி அமைப்பாளர் டாக்டர் மா. தீபன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஷ், அன்பு, வார்டு கவுன்சிலர் பரிதா ஜெகன், திருப்பாலைவனம் விஜய் அன்பு, காண்ட்ராக்டர் ஜோதீஸ்வரன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சம்பத், சுகுமார், ஜெயசீலன் உட்பட திமுக கழக ஒன்றிய நகர நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com