திண்டிவனத்தில் பூக்கடைக்காரர் வீட்டை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை

சிலம்பரசன் குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்று விட்டார். போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
சிலம்பரசன் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
சிலம்பரசன் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
Published on

விழுப்புரம்:

திண்டி வனத்தில் பூக்கடைக்காரர் வீட்டை உடைத்து 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35 இவர் திண்டிவனத்தில் பூக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்று விட்டார். இந்த நிலையில் பூட்டிய வீட்டில் இருந்து சத்தம் வந்ததை கண்டு அக்கம் பக்கம் தினர் உள்ளே சென்று பார்க்க முற்பட்டபோது சிலம்பரசன் வீட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் தப்பி ஓடினார்.

இதையடுத்து இது சம்பந்தமாக சிலம்பரசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலம்பரசன் திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் மர்ம நபரை தேடி தேடினர். மேலும் சிலம்பரசன் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது சம்பந்தமாக சிலம்பரசன் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com