வேன் மோதி மீன் வியாபாரி பலி

காட்டாற்று பாலம் எதிரே மல்லிப்பட்டினத்தில் மீன்லோடு இறக்கிவிட்டு வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேன் மோதி மீன் வியாபாரி பலி
Published on

பேராவூரணி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி மயிலாடு தெருவை சேர்ந்தவர் காதர்மைதீன் (வயது 60).

இவர் கட்டுமாவடி மொத்த மீன் விற்பனை மையத்திற்கு தினசரி அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்து மீன் வாங்கிச் சென்று சில்லரை வியாபாரம் செய்வது வழக்கம்.

சம்பவத்தன்று அதிகாலை கட்டுமாவடி சென்று மீன் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த போது அம்மணிசத்திரம் காட்டாற்றுப் பாலம் எதிரே மல்லிப்பட்டினத்தில் மீன்லோடு இறக்கிவிட்டு வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழ ந்தார்.

இதுகுறித்து அவரது மகன் அலாவுதீன் (39).அளித்த புகாரின்பேரில் சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திலேயே மினிவேனை விட்டுவிட்டு தலைமறைவான ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com