கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் பலி

மல்லிபட்டினத்தைச் சேர்ந்த மருதை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.படகில் இருந்த கனமான மரப்பலகை முருகன் தலையில் திடீரென விழுந்தது.
கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் பலி
Published on

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 46).மீனவர்.

இவர் சக மீனவர்களுடன் மல்லிபட்டினத்தைச் சேர்ந்த மருதை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.

மல்லிப்பட்டினம் துறைமுக பகுதியில் இருந்து, சுமார் 6 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, படகில் இருந்த கனமான மரப்பலகை முருகன் தலையில் திடீரென விழுந்தது.

இதில் படுகாயமடைந்த முருகனை உடன் இருந்த மற்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு கொண்டு வந்தனர்.

அங்கிருந்து சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com