காரமடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் யானை

காரமடை வனச்சரக பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். 8 முதல் 10 வயதுடைய பெண் காட்டு யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரமடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் யானை
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்தி–ற்குட்பட்ட நெல்லித்துறை காப்புக்காடு, மானார் சுற்று வனப்பகுதியில் காரமடை வனச்சரக பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மானார் சரக வன பகுதியில் 8 முதல் 10 வயதுடைய பெண் காட்டு யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யானை உடலின் மேற்பகுதியில் எந்தவித காயங்களும் இல்லை. இதனிடையே யானையின் இறப்பு குறித்து உடற்கூறாய்வு இன்று நடைபெறுகிறது. அதனபின்னரே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com