தியாகதுருகம் அருகே பூச்சி மருந்து குடித்த விவசாயி சாவு

கிருஷ்ணமூர்த்தி கடந்த சில நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தியாகதுருகம் அருகே பூச்சி மருந்து குடித்த விவசாயி சாவு
Published on

கள்ளக்குறிச்சி :

தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த வர் கிருஷ்ணமூர்த்தி (வயது 44). விவசாயி, இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத் தன்று தனது விவசாய நிலத்துக்குச் சென்றவர் அங்கு இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்து போனார். இதுகுறித்து அவரது தம்பி கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com