திண்டிவனம் புறவழிச்சாலையில் தடுப்பு கட்டையில் மோதி கண்டெய்னர் லாரி விபத்து

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்து விபத்து.
திண்டிவனம் புறவழிச்சாலையில் தடுப்பு கட்டையில் மோதி கண்டெய்னர் லாரி விபத்து
Published on

திண்டிவனம்:

சென்னையில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று பெரம்பலூருக்கு சென்று கொண்டிருந்தது. இதை பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது35) என்பவர் ஓட்டி சென்றார்.

திண்டிவனம் சென்னை புறவழிச்சாலை மரக்காணம் மேம்பாலம் மேல் வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி உடைந்து சாலையில் சிதறியது. விபத்தில் லாரியில் பயணம் செய்த மாற்று டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் வரகூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (38),லோடுமேன்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் (22),மற்றும் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த செல்வராஜ் (55) அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

இதுகுறித்து அறிந்த திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com