சிறுமுகையில் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

நாகராஜ் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். பிக்கப் வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.
சிறுமுகையில் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் நாகராஜ் (35). கட்டிட தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி இரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நாகராஜ் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சிறுமுகையில் இருந்து வேலைக்காக மேட்டுப்பா ளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அய்யப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிக்கப் வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில் நாகராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் அதே இடத்தி்ல் உயிர் இழந்தார்.

சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com