பொள்ளாச்சி அருகே மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர்

2 பேரும் கடந்த 5 வருடங்களாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர்
Published on

பொள்ளாச்சி,

கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் ஐ.டி முதல் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இதையடுத்து மாணவியை, அவரது தாய் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதை கேட்டதும் மாணவியின் தாய் அதிர்ச்சியானார். இதற்கிடையே இந்த தகவல் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்க ப்பட்டது.

இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில் மாணவியும், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபரும் 6-ம் வகுப்பில் இருந்து தற்போது கல்லூரி வரை ஒன்றாக படித்து வருவது தெரியவந்தது.

நீண்ட நாள் பழக்கம் என்பதால் இவர்களது நட்பு காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 5 வருடங்களாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்பு தேர்வின் போது விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது மாணவி, தனது காதலரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த சமயம் அங்கு யாரும் இல்லாததால் காதலர், தான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகளை தெரிவித்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனால் தற்போது மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com