காரைக்காலில் கல்லூரி மாணவி மாயம்

சுபஸ்ரீ பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியல் கல்லூரியில் பி.டெக் இறுதி யாண்டு படித்து வருகிறார். 25-ந் தேதி காலை வழக்கம் போல், கல்லூரிக்கு சென்ற சுபஸ்ரீ, இரவு வரை வீடு திரும்பவில்லை.
காரைக்காலில்  கல்லூரி மாணவி மாயம்
Published on

காரைக்கால்:

காரைக்கால் சின்னக் கண்ணு செட்டிவீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். சொந்தமாக கடை நடத்தி வரும் இவருக்கு, கவிதா என்ற மனைவியும், பவித்ரா (வயது26), சுபஸ்ரீ (22) என்ற 2 மகள்களும் உள்ளனர். சுபஸ்ரீ காரைக்கால் செருமா விளங்கை பகுதியில் இயங்கி வரும் பெருந்தலைவர் காம ராஜர் அரசு பொறியல் கல்லூரியில் பி.டெக் இறுதி யாண்டு படித்து வருகிறார். வழக்கமாக, காலை கல்லூ ரிக்கு செல்லும் மாணவி, மாலை வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 25-ந் தேதி காலை வழக்கம் போல், கல்லூரிக்கு சென்ற சுபஸ்ரீ, இரவு வரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து, தந்தை பல்வேறு இடங்களில் தேடியும், தோழிகள், உறவி னர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, மாணவியை கண்டு பிடித்துதருமாறு, தந்தை காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com