காரைக்காலில் கல்லூரி மாணவி மாயம்

காரைக்காலில் கல்லூரி மாணவி மாயமானார்.04368222402 என்ற போனில் தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரைக்காலில் கல்லூரி மாணவி மாயம்
Published on

புதுச்சேரி:

காரைக்கால் அருகே திருநள்ளாறு மாரியம்மன் கோவில் தெருவை ச்சேர்ந்தவர் ஆரவமுதன். இவரது மகள் ஈஸ்வரி தெய்வநாயகி(வயது19). இவர் கடந்த 21-ந் தேதி, வழக்கம் போல், வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றார். அன்று இரவு வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக உறவினர்கள், தோழிகள் வீட்டில் தேடியும் கிடைக்கா ததால், தந்தை ஆரவமுதன், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில், மகளை தேடி  கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர். மேலும், ஈஸ்வரி தெய்வநாயகி கல்லூரி சென்ற அன்று, கருநீலம் மற்றும் வெள்ளை கலரில் சுடிதார் அணிந்தி ருந்ததாகவும், இடது கை மணிகட்டில் ஏ.இ.எஸ்எச்யு. என பச்சை குத்தியிருப்பார்., இவரை பற்றி தகவல் தெரிந்தால், காரைக்கால் நகர காவல்நிலையம அல்லது, 04368228007, 04368222402 என்ற போனில் தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com