வடவள்ளி அருகே துணி அயர்ன் கடை எரிந்து நாசம்

தீயணைப்பு போலீசார் வருவதற்குள் கடை தீக்கிரையானது கடைக்கு யாராவது தீவைத்தார்களா என விசாரணை
வடவள்ளி அருகே துணி அயர்ன் கடை எரிந்து நாசம்
Published on

வடவள்ளி,

கோவை வடவள்ளி அருகே உள்ள பெரியார் நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் பிரபா (வயது 65). இவரது வீட்டின் முன்பு ஆறுச்சாமி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக துணி அயர்ன் செய்யும் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

இன்று அதிகாலை திடீரென அந்த அயர்ன் கடை தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த துணிகளும் தீக்கிரையானது.

இதுபற்றி வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த கடைக்கு யாராவது தீவைத்தார்களா, அல்லது விபத்து காரணமாக தீப்பிடித்ததா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.  

X

Maalai Malar
www.maalaimalar.com