பண்ருட்டி அருகே சரக்கு வாகனம் மோதி முந்திரி வியாபாரி பலி

எதிரே வந்த சரக்கு லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகே  சரக்கு வாகனம் மோதி முந்திரி வியாபாரி பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே புதுப்பேட்டை தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 37). முந்திரி வியாபாரி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று இரவு 11 மணிக்கு மோட்டார் சைக்கிளில் அங்குசெட்டி பாளையத்திற்கு சென்றார் . அங்கு செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்த காத்தவராயனை ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com