மேல்மலையனூரில் அலுவலரை பணிசெய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு

ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்தனர். அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கு பணி செய்து கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தார்.
மேல்மலையனூரில் அலுவலரை பணிசெய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு
Published on

விழுப்புரம்:

மேல்மலையனூர் அருகே சிறுதலைப் பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்தனர். இதனையடுத்து ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தாசில்தார் அலெக்சாண்டர் உத்தரவிட்டிருந்தார். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதியிலுள்ள மக்கள் காலக்கெடு கேட்டனர். இந்நிலையில் சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் அருள்தாஸ் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கு பணி செய்து கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச் செல்வனிடம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறி மிரட்டி, அவரை பணி செய்யவிடாமல் தடுத்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வளத்தி போலீசார் அருள்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com