காரைக்கால் கோட்டுச்சேரியில் தாய், மகனை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

தனது மனைவி யுடன் சண்டை போட்டு க்கொண்டி ருந்தபோது, ஊர்க்கா ரர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். தடுக்கவந்த மகன் இருதயராஜையும் செந்தில்குமார் கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.
காரைக்கால் கோட்டுச்சேரியில் தாய், மகனை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
Published on

புதுச்சேரி:

காரைக்கால் கோட்டுச்சேரி கீழகாசா குடியைச்சேர்ந்தவர் ஜேம்ஸ்மேரி (வயது60). இவரது மகன் இருதயராஜ். இருதயராஜ் பந்தல்வேலை செய்துவருகிறார். கடந்த 26ந் தேதி ஜேம்ஸ்மேரி வசிக்கும் பகுதியில், செந்தில்கு மார் என்பவர் தனது மனைவி யுடன் சண்டை போட்டு க்கொண்டி ருந்தபோது, ஊர்க்கா ரர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். அந்த இடத்தில், ஜேம்ஸ்மேரியும் இருந்தார். கடந்த 27-ந் தேதி செந்தில்குமார் ஜேம்ஸ் மேரி வீட்டு வாசலுக்கு சென்று, எங்கள் குடும்ப பிரச்சனையில் ஏன் தலையிடுகிறீர்கள் என கேட்டு, கையில் வைத்திருந்த கட்டையால் ஜேம்ஸ்மேரியை தாக்கினார்.

இதனை தடுக்கவந்த மகன் இருதயராஜையும் செந்தில்குமார் கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 2 பேரும் கோட்டுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி பெற்று, தொடர் சிகிசைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு ஜேம்ஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com