

தேனி:
தேனி பழனிசெட்டி பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது50). இவருக்கும் கோடாங்கிபட்டியை சேர்ந்த ஜெயலட்சுமி (33) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இது 2-ம் திருமணம் ஆகும்.
செந்தில்குமார் கோவையில் உள்ள நகை பட்டறையில் வேலை பார்த்து வந்ததால் அங்கு குடி பெயர்ந்தனர். அதன்பின்னர் திருமணத்தி ன்போது கொடுத்த 15 பவுன் நகையை ஜெயலட்சுமிக்கு தெரியாமல் செலவழித்து விட்டார்.மேலும் ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து தட்டிக்கேட்டதால் செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை அப்பாவிமணி, தாய் ராஜம்மாள் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் அவருக்கு பிறந்த 2 குழந்தைகளையும் பார்க்க விடாமல் ஜெயலட்சுமியை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.