குற்றாலம் அருகே மாணவியிடம் ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் மீது வழக்கு

அன்சாரி மாணவி ஒருவரிடம் பாலியல் நோக்கத்துடன் பேசியதாக கூறப்படுகிறது. போக்சோ சட்டத்தின் கீழ் முகமது அன்சாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றாலம் அருகே மாணவியிடம் ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் மீது வழக்கு
Published on

தென்காசி:

தென்காசி ஆசாத்நகரில் தனியார் இன்ஸ்டிடியூட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் முதல்வராக தென்காசி நடுப்பேட்டை தெருவை சேர்ந்த முகமது அன்சாரி(வயது 55) என்பவர் இருந்து வருகிறார். இவர் 17 வயதான கல்லூரி மாணவி ஒருவரிடம் பாலியல் நோக்கத்துடன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் குற்றாலம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் முகமது அன்சாரி மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com