திண்டிவனம் அருகே இன்று விபத்து சாலையில் கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் காயம்

திண்டிவனம் அருகே இன்று விபத்து சாலையில் கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் காயம்
திண்டிவனம் அருகே இன்று விபத்து சாலையில் கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் காயம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அணிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். டிரைவர், இவர் தனது உறவினர்கள் பொம்மையார்பாளையத்தை சேர்ந்த டால்பின் டிசோசா,நிதின் காசிநாத் காய் கட் வார்ட் ஆகியோரை மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு காரில் அழைத்துச் சென்றார் இந்த கார் திண்டிவனம் அருக கொள்ளார் பகுதியில் சென்றது. அப்போது அங்கு பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்தபெண் மீது மோதா மல் இருக்க தேவசாகயம் காரை திருப்பி உள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் காரில் வந்த3 பேரும் படு காயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com