என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
களக்காடு அருகே கொடை விழா பார்க்க சென்ற சிறுவன் மாயம் - தந்தை போலீசில் புகார்
- களக்காடு அருகே உள்ள மூங்கிலடி, வண்ணாந்துரை ஓடையை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது48).
- கொடை விழாவை பார்க்க இம்மானுவேல் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சென்றிந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மூங்கிலடி, வண்ணாந்துரை ஓடையை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது48). இவர் செங்கல்சூளையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 30-ந்தேதி இரவில் மூங்கிலடி முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
கொடை விழாவை பார்க்க இம்மானுவேல் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சென்றிந்தார். பின்னர் இம்மானுவேல் தனது மனைவி மற்றும் 2-வது மகனுடன் வீட்டிற்கு வந்து விட்டார். மூத்த மகன் சுடலைமுத்து (14) கொடை விழா பார்க்க கோவிலிலேயே இருந்தார். அதன் பின் சுடலைமுத்து வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த இம்மானுவேல் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் சுடலைமுத்து பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுவனை தேடி வருகிறார்.