சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் சிறையில் அடைப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே 17 வயது சிறுமி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படு கிறது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்த சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் சிறையில் அடைப்பு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு, காமராஜர் நகரை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகன் சிவக்குமார் (வயது 23) கூலித்தொழிலாளி.

இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்த சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கலில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, பரமத்தியில் உள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com