செந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்து காட்டெருமை பலி

கோசுகுறிச்சி கால்நடை மருத்துவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கால்நடைதுறையினர் இறந்த காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர்.பின்னர் காட்டெருமையை வனப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
பலியான காட்டெருமை.
பலியான காட்டெருமை.
Published on

நத்தம்:

செந்துறை அருகே பழனிபட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் 8 வயதுள்ள காட்டெருமை இறந்து கிடந்தது. இதை பார்த்த கணேசன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் வனத்துறை சார்பில் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இறந்த காட்டெருமையை மீட்டனர். பின்னர் கோசுகுறிச்சி கால்நடை மருத்துவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கால்நடைதுறையினர் இறந்த காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து காட்டெருமை வனப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com